மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யேர்மனி டோட்மூண்ட் நகரிலே உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் வணக்க நிகழ்வு
குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்ட வேளையில் அதற்குள் வெட்டுக்கிளி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றைய தினம் மன்னார் நகர் பகுதியில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பித் துண்டு காணப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று மற்றுமொரு உணவுப் பொருளில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
இதனையடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இவ்விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உரிய முறையில் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.
பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு, உணவகங்களில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
