தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது வெண்கலச் சிலையை, 2026 செப்டம்பர் 27 அன்று அதிகாலை 6:30 மணியளவில் இலங்கை காவல்துறையினர் அத்துமீறி அகற்றிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன்
இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையின் மீதான நேரடித் தாக்குதல் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் பேரினவாத அடக்குமுறைப் போக்கையும், சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மனநிலையையுமே இச்செயல் வெளிப்படுத்துவதாக அம்மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ் மக்களது உணர்வுகளைக் கிளறிவிட்டு, அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்குடனே இவ்வாறான தொடர்ச்சியான சீண்டல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீதான இத்தகைய அடக்குமுறைகளையும் இனவாதப் போக்கையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் தங்களின் ஊடக அறிக்கையின் மூலம் வன்மையாகக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


