மொன்றியலில் எழுச்சியுடன் நினைவேந்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு நாள்
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவு நாள், கனடாவின் மொன்றியல் நகரில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடனும் நினைவேந்தப்பட்டது.
நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டு, தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தி நினைவுகூர்ந்தனர்.
இதன்போது, திலீபனின் நினைவைப் போற்றும் வகையில் பல எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன. பல்வேறு நிகழ்வுகள் ஊடாக அவரது நினைவும் தியாகமும் நினைவுகூரப்பட்டதுடன், பங்கேற்றவர்கள் உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.




