தமிழீழத்தில் எழுச்சியுடன் தொடரும் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் – பொத்துவிலில் தொடங்கி களுதாவளையை நோக்கி
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஒரு பகுதியாக, அவரது திருவுருவப்படம் தாங்கிய நினைவு ஊர்திப் பயணம் தென் தமிழீழத்தின் அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து 16.09.2026 அன்று ஆரம்பமானது.
மக்களின் வணக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் இந்த நினைவு ஊர்தி, இன்று 17.09.2026 தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைப் பகுதியில் பயணித்து வருகிறது.
பயணத்தின் வழித்தடங்களில் பொதுமக்கள் திரண்டு, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் அவரது நினைவு மற்றும் தியாகத்தை மக்கள் மத்தியில் நினைவுகூரும் நிகழ்வாக இப்பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
பொத்துவிலில் தொடங்கிய நினைவு ஊர்திப் பயணம், பல்வேறு பகுதிகளை கடந்து நல்லூரை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களின் வணக்கத்துடனும் நினைவேந்தல் நிகழ்வுகளுடனும் இந்தப் பயணம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.









