மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(16.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இத்துயரச் சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.
