வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்குச் சென்றிருந்த ஆசிரியர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, அலுமாரிகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடர்கள் வீட்டுக்குள் இருந்த சங்கிலி, தோடுகள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், தடயவியல் பொலிஸாரின் உதவியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
