குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் மென்பொருள் ஒன்றை நிறுவும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அத் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளரான கே.ஹேரத் என்பவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது
