சுதந்திரப்பறவைகள் 1985 ஆவணியில் இருந்து விடுதலைப் புலிகள் மகளிர்
சுதந்திரப்பறவைகள் 1985 ஆவணியில் இருந்து விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணியின் மாதர் இதழாக சஞ்சிகை வடிவிலும், 1992 இன் பிற்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடாக பத்திரிகை வடிவிலும் வெளியீடு செய்யப்பட்டது.
களத்திலும் தளத்திலும் பெண்களினதும், பெண் போராளிகளினதும் வீரம் நிறைந்த செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள், சமர்க்களக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பெண் போராளிகள், பெண்ணியம் என பெண்களை முன்னிலைப்படுத்தி பெண் எழுத்தாளர்களினதும் பெண் போராளி எழுத்தாளர்களினதும் படைப்புக்களைத் தாங்கி வெளிவந்தது.
