2025 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் பௌதீக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
அதன்படி, ஹாட்லிக் கல்லூரி மாணவனான அனுராகந்தன் விஸ்வகாந்தன் கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 12வது இடத்தையும் பெற்றுள்ளார்.
அத்துடன் உயிரியல் பிரிவில் சந்திரபாலா கதுசன் 3ஏ சித்திகளை பெற்று மாவடட மடடத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 20வது இடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தில் உமாபதி கிருஷாந்த் 2ஏபி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 50வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
ஹாட்லி கல்லூரியில் கணித பிரிவில் மொத்தமாக 10 மாணவர்கள் 3ஏ சித்திகளையும், 2 மாணவர்கள் 2ஏபி சித்திகளையும் பெற்றுள்ளதுடன், உயிரியல் பிரிவில் 6 மாணவர்கள் 3ஏ சித்திகளையும், 4 மாணவர்கள் 2ஏபி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் பொறியியல் தொழில்நுட்பத்தில் 12 மாணவர்களும், உயிரியல் தொழில்நுட்ப பாடத்தில் 2 மாணவர்களும், வர்த்தகத்தில் 5 மாணவர்களும், கலை பிரிவில் 5 மாணவர்களும், ஏனைய பாடங்களில் ஒரு மாணவனும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
