திருகோணமலை- சாம்பல்தீவு சந்திப்பகுதியில் முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(24.10.2026) மாலை நிலாவெளி பிரதான வீதியின் சாம்பல்தீவு சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன்,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
