அம்பாந்தோட்டையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுவனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (23-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி இளைஞர் அவரது வீட்டில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கட்டுவனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
