பதுளையில் இலட்சம் பெறுமதியான டயர்களைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (21-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, ஹாலிஎல போகஹமடித்த பகுதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றிலேயே இவ்வாறு திருட்டு இடம்பெற்றுள்ளது.
இதில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான 99 டயர்கள் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவச் சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த டயர் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்களின் செயற்பாட்டைத் தடைசெய்துவிட்டு சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
