ஜனாதிபதி அநுர குமாரவை ஆதரித்து “ஜனவரம புரவசியோ”(மக்கள் ஆணை) அமைப்பினால் தேரர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
திருடர்கள்-தீயவர்கள்-போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் சூழ்ச்சிகாரர்களை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி இடம்பெற்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்று திரண்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு குழுவினர் தற்போது ஜனாதிபதியை சந்திக்க செயலகத்துக்கு சென்றனர்.
