போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8.5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லெப்டினன்ட் திலகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றப் பொறுப்பிலுள்ள 1.5 கோடி ரூபா பணமும், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் அமைந்துள்ள 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இருமாடி வீடும் முடக்கப்பட்டுள்ளன.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை (15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இந்த முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் 1.5 கோடி ரூபா பணத்தை வைத்திருந்த ஐந்து பேர் லொறியொன்றுடன் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போது, சந்தேகநபர்களில் ஒருவரான மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இருமாடி வீட்டைக் கட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
