கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கியுள்ளன.
இன்று (13) பிற்பகல் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள்தீக்கிரையாக்கியுள்ளன.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், தற்போது தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என்பதுடன் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீப்பரவலால் ஏற்பட்ட சேதங்களையும் நிலவும் சூழ்நிலையையும் பார்வையிடுவதற்காக கொழும்பு மாநகரசபை முதல்வர் வ்ராய் கெலீ பல்தசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தார்
- ரணில் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து…! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பயணிகள் கைது
- மன்னாரில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்!
- பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்
- சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
