திருகோணமலை – ஹபரணை வீதியில் அதி சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹதுரஸ்கட்டுவ பகுதியில் இன்று (11) அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகமாலை முன்னகர்வு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் நினைவில்.
இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேருந்தில் சாரதியும் உரிமையாளரும் மாத்திரம் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள
இந்தநிலையில் குறித்த இருவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளை தீயணைப்புப் பிரிவினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டுள்ள நிலையில் ஹபரணை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 thought on “திருமலையில் எரிந்து தீக்கிரையான அதி சொகுசு பேருந்து”
Comments are closed.