யாழ்ப்பாணம், கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று மாலை பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி
நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக, கலைநயத்துடன் அமைக்கப்பட்ட பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டதுடன், நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் அமிர்தலிங்கம் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன், தென்மராட்சி பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உரிமை உத்தியோகத்தர் முருகவேள் சுரேஷ்வரன் மற்றும் பழைய மாணவர் நடேசபிள்ளை சுந்தரேஸ்வரன் உள்ளிட்டோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப். மாலதி படையணி.!
இதன்போது நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளும் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன. அத்துடன், சிறந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குரு பிரதீபா பிரபா விருதைப் பெற்ற பாடசாலை அதிபரும் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை, நூற்றாண்டு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (10) பாடசாலையில் தொடர்ந்து நடைபெறவுள்ளன
