யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணலை அகழ்ந்து சேமித்து வைத்திருந்த நபரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
2ம் லெப். மாலதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.10.10.1987 –10.10.2026 !

அரியாலை பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி பெருந்தொகை மணலை ஒருவர் சேமித்து வைத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த நபரை கைது செய்தனர்.
கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப். மாலதி படையணி.!
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 08 க்யூப் மணலை பொலிஸார் கைப்பற்றினர்.அத்துடன் குறித்த மணல் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுக்கப்பட்டவை என்பதனையும் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- ரணில் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து…! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பயணிகள் கைது
- மன்னாரில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்!
- பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்
- சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
