வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கனமழையுடன் கூடிய பலத்த காற்றினால் பாரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.இந்தச் சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வீடும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
வவுனியாவின் பல பகுதிகளில் இன்று கடும் மழை பெய்ததுடன், சில பகுதிகளில் பலத்த காற்றும் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே குறித்த மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது வீழ்ந்ததாக கூறப்படுகிறது.
