இயக்கச்சி மல்வில் கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள தனியார் காணிகளில் நள்ளிரவு வேளைகளில் மணல் கொள்ளையர்களால் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.
தேசியத்தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த புலேந்திரன் ,குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள்.!
இயக்கச்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளில் மணல் கொள்ளையர்கள் இரவு வேளையில் தனியார் நிறுவன காணிகளின் வேலிகளை வெட்டி அகற்றிவிட்டு டிப்பர்களில் சென்று, மணலை கொள்ளையிட்டுச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை தொடர்பாக அரச திணைக்களங்களில், துறை சார்ந்தவர்களிடம் முறையிடப்பட்டுள்ளபோதும் ஆக்கபூர்வமான செயற்பாடு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பாதிப்புக்குள்ளான தனியார் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
