வவுனியா, செக்கடிப்பிலவு பகுதியில் இன்று(1) மாலை மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
02.10.2000 அன்று “ஓயாத அலைகள் 04″ படை நடவடிக்கையின் போது புயலாக வீசிய மாவீரர்கள் நினைவில்.
செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜோசப் அன்ரனி என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
கிட்டு ஞாபகார்த்த பூங்கா : மடை மாற்றம்
இந்நிலையில் மேற்படி இளைஞர் அந்தப் பகுதியிலுள்ள மைதானத்தில் இருந்தவேளை, திடீரென மழை தீவிரமடைந்துள்ளது.
இதனால் அவர் அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கிய வேளையில், எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

1 thought on “வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்”
Comments are closed.