மன்னார் பஜார் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவம் வர்த்தகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இரண்டு நகைக்கடைகள் மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்கள் என ஒரே நேரத்தில் நான்கு வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து திருடர்கள் நுழைந்துள்ளனர்.
குறித்த கடைகளின் மேற்பகுதியில் கூரையை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், அங்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இந்த சம்பவம் உடனடியாக தெரியவரவில்லை.
இன்று காலை வழக்கம்போல் வர்த்தக நிலையங்களை திறந்தபோதுதான், தமது கடைகளுக்குள் திருடர்கள் நுழைந்திருப்பதை உரிமையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, நகைக்கடை மற்றும் ஆடை விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
