யாழ்ப்பாணத்தின் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி சிறீலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவச் சிலையை மீள உரிய இடத்தில் உடனடியாக வைக்க கோரியும் ,வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு எட்டு மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரடியிலும், திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோவிலடியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவிலடியிலிருந்து கச்சேரி வரையும்,
அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் மத்திய சந்தையடியில் ஆரம்பித்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரையும்,
மன்னார் மாவட்டத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபியடியிலும், வவுனியா மாவட்டத்தில் பொங்குதமிழ் நினைவுத் தூபியடியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலும் இடம்பெற உள்ளது.
இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

