வவுனியாவில் 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வுப் பேரணியொன்று நடைபெற்றது.
இலங்கை தமிழ் செவிப்புலவலுவற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியை வவுனியா மாநகரசபை மேயர் சு. காண்டீபன் ஆரம்பித்து வைத்தார்.
“சைகை மொழி உரிமைகள் இல்லாமல், மனித உரிமைகள் இல்லை” என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வுப் பேரணியானது, வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகி, பஜார் வீதியின் ஊடாக வவுனியா நகரைச் சென்றடைந்தது. அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து, இறுதியாக வவுனியா மாநகரசபை மைதானத்தைச் சென்றடைந்தது.
குறித்த பேரணியில் கலந்துகொண்டவர்கள், “எமது கற்றலை சைகை மொழியில் தாருங்கள்“, “தமிழ் சைகை மொழி அனைவருக்கும்“, “சைகை மொழி எங்கள் உரிமை“, “எமது மொழி சைகை மொழி” போன்ற பல்வேறு வாசகங்களைதாஙகியவாறு பேரணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




