தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் யாழ் பல்கலையில் இரத்ததான முகாமொன்று இன்றையதினம்(24) நடைபெற்றது.
திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரத்ததான முகாமும் இடம்பெற்றது
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் இணைந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
