மிழீழத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் – எட்டாம் நாள்.
.”மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த எட்டாம் நாள். இன்றாகும்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் வட தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
இன்று (22 .09.2026) எட்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வின் ஈகைச்சுடரினை முன்னாள் போராளி தயா அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.









