தமது அரசாங்கம் உள்நாட்டில் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அநுர தெரிவித்தார்.
மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இத்தகைய விலைக் கட்டுப்பாட்டைத் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
