கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இயக்கச்சி சந்தியில் இருந்து கோவில் வயல் செல்லும் பிரதான வீதியில் இன்று (03) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கயஸ் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் விபத்துச் சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்கா கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
