வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு உண்டியல் காசு திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் காலை ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து துரித கதியில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருவரை குறிகட்டுவான் பகுதியிலும் , மற்றுமொருவரை நயினாதீவு பகுதியிலும் வைத்து கைது செய்துள்ளனர்.
